×

அம்பேத்கர் பிறந்தநாளின்போது விசிகவினருடன் தகராறு நடிகை காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை கோயம்பேட்டில் கொண்டாடப்பட்டபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு வந்த பாஜவை சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்ததாக இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பிலும் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி பாஜ கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.அவரது மனுவில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கட்சி கொடிகளை கீழே போட்டு மிதித்ததாகவும், கல்வீசி தாக்கியதாகவும், விசிக சார்பில் புதிய குமார் என்பவர் அளித்த புகாரில் தன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசிகவினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 30 நாளுக்கு விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்….

The post அம்பேத்கர் பிறந்தநாளின்போது விசிகவினருடன் தகராறு நடிகை காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனை முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Gayatri Raghuram ,Vishikas ,Ambedkar ,Chennai ,Liberation Tigers ,Tamil ,Nadu ,
× RELATED அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர்