×

118 நாட்களாக நடந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது

வாஷிங்டன்: கடந்த 118 நாட்களாக நடந்து வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சம்பளப் பற்றாக்குறை, ஏஐ தொழில்நுட்ப அச்சுறுத்தல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக ‘ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா’ என்ற அமைப்பு கடந்த மே மாதம் முதல் கடுமையாகப் போராடி வந்தது. இதை தொடர்ந்து ஹாலிவுட் நடிகர்களும் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். சமீபத்தில் ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்களுடனான தயாரிப்பு நிறுவனங்களின் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், நடிகர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அவர்களின் போராட்டம் மட்டும் முடிவடையாமல் நீடித்தது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால், கடந்த 118 நாட்களாக நீடித்து வந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர்களுக்கும் இடையே கையெழுத்தான புதிய மூன்றாண்டு ஒப்பந்தம், SAG-AFTRA என்ற அமைப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் நடிகர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு, ஸ்ட்ரீமிங் பங்கேற்பு போனஸ், ஏஐ தொழில்நுட்பத்துக்கான கட்டுப்பாடுகள் உள்பட பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் நடிகர்களின் நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததால், நேற்று முதல் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடக்கும் என்று தெரிகிறது.

The post 118 நாட்களாக நடந்த ஹாலிவுட் நடிகர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hollywood ,Washington ,Writers Guild of America ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்