×

மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல்: திருமண விழாவில் சுவாரஸ்யம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடியை சேர்ந்த மெய்யழகன்- துர்கா ஆகியோரின் திருமணம், சீர்காழியில் உள்ள திருமண மண்டத்தில் நேற்று நடந்தது.  திருமணம் என்றாலே வித்தியாசமான முறையில் மணமக்களுக்கு பரிசு பொருட்களை நண்பர்கள் வழங்குவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை குறிக்கும் வகையில் மணமக்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் 5 லிட்டர் பெட்ரோலை அவர்களது நண்பர்கள் வழங்கினர். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது….

The post மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல்: திருமண விழாவில் சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Meiyazhagan ,Durga ,Kodangudi ,Mayiladuthurai ,
× RELATED திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில்...