×

கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் திருமணம்

திருவனந்தபுரம்: கேரள ஐஏஎஸ் அதிகாரிகளான ஸ்ரீராம் வெங்கட்ராமன், ரேணு ராஜ் ஆகியோரது திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. கேரளாவில் சுகாதாரத்துறை இணை செயலாளராக இருப்பவர் டாக்டர் ஸ்ரீராம் வெங்கட்ராமன். எம்பிபிஎஸ் முடித்த பிறகு கடந்த 2013ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மலையாள பத்திரிகை நிருபர் பஷீரை கார் ஏற்றி கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கும் ஆலப்புழா மாவட்ட கலெக்டரான டாக்டர் ரேணு ராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. வரும் 28ம் தேதி சோட்டானிக்கரை கோயிலில் இவர்களது திருமணம் நடைபெறுகிறது….

The post கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் திருமணம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,IAS ,Thiruvananthapuram ,Sriram Venkatraman ,Renu Raj ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது