×
Saravana Stores

ராஷ்மிகா ரன்பீர் காதல்

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்குக்கு சென்று வெற்றிபெற்றார். பிறகு ‘சுல்தான்’, ‘வாரிசு’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். அவர் இந்தியில் நடித்த ‘குட் பை’, ‘மிஷன் மஜ்னு’ ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய உதவி செய்யவில்லை. ‘குட் பை’ படத்தில் அமிதாப் பச்சனுடனும், ‘மிஷன் மஜ்னு’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடனும் நடித்தார். தற்போது ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ படத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம், முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூருடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்திருந்தார். தற்போது இந்த முத்தக்காட்சி போட்டோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ரன்பீர் கபூர், ‘இருவரும் தற்போது காதலில்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு வைரலானது. இது படத்தின் புரமோஷனுக்கான ஐடியாவா? அல்லது நிஜமாகவே இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட்டை காதல் திருமணம் செய்தார். அவர்களுக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள்.

மேலும், மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் தனி வீடு ஒன்றை அலியா பட் வடிவமைத்து கட்டிக்கொண்டு இருக்கிறார். அதில் கணவர் ரன்பீர் கபூர், மகள் ராஹாவுடன் குடியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனாவை இணைத்து வெளியாகும் செய்தியை அறிந்து அலியா பட் லேசான கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

The post ராஷ்மிகா ரன்பீர் காதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rashmika Ranbir ,Rashmika Mandhana ,Bollywood ,Rashmika Ranbir Kadhal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சைபர் கிரைம் தடுப்பு மையத்தின்தூதர்...