×

இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்? சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை – இந்தியா மின்பாதையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Union Government ,Sri Lanka Sea ,Line ,Chennai ,B.M.K. ,Ramadas ,India ,Sri Lanka ,
× RELATED நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை தரவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்