×

கீழடி 8ம் கட்ட அகழாய்வு 4 சுடுமண் பானைகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் 4 சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடியில் வீரணன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில், 8 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 5 குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. நேற்று கீழடியில் ஒரே குழியில் 4 சுடுமண் பானைகள் மேற்பகுதி உடைந்த நிலயிலும், ஒரு பானைக்குள் சுடுமண் கூரை ஓடு ஒன்றும் தென்பட்டுள்ளது. முழுவதும் தோண்டப்பட்ட பின்னரே பானையின் முழு வடிவத்தையும் காணமுடியும். மற்றொரு குழியில் பச்சை பாசிமணிகள், சிறுமிகள் விளையாடும் சுடுமண் சில்லாக்குகள் கிடைத்துள்ளன. கொந்தகையில் 2 குழிகள், அகரத்தில் 3 குழிகள் அரசு புறம்போக்கு நிலத்தில் தோண்டி அகழாய்வு மேற்கொள்ள இடம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகின்றது. மணலூரில் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. கீழடியில் பிப்.11ல் தொடங்கிய அகழாய்வு பணிகள் செப்டம்பர் வரை நடைபெறவுள்ளன. …

The post கீழடி 8ம் கட்ட அகழாய்வு 4 சுடுமண் பானைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai District ,Tirupuvanam ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...