×

திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஏட்டு பாலியல் புகார்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகாசி: சிவகாசி அருகே பெண் ஏட்டு கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டத்தில் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் முத்துப்பாண்டியன். இவர், அதே ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் ஏட்டுக்கு இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தான் சொல்வதை கேட்காவிட்டால் கடுமையான பணி கொடுக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு, சிவகாசி டிஎஸ்பி பாபு பிரசாந்திடம் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் விசாரித்துள்ளார். அதனடிப்படையில் மதுரை டிஐஜி பொன்னி ஆலோசனையின்படி, இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார். …

The post திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் மீது பெண் ஏட்டு பாலியல் புகார்: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Thiruthangal ,Sivakasi.… ,
× RELATED கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன...