×

ஆசிய போட்டியில் 3வது தங்கம் ரவி தாஹியா சாதனை

உலான்பாதர்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரவி தாஹியா வசப்படுத்தி உள்ளார். மன்கோலியாவின் உலான்பாதர் நகரில் நடக்கும் இத்தொடரின் ஆண்கள் 57 கிலோ எடை பிரிவு பைனலில் கஜகஸ்தான் வீரர் ரகத் கல்ஸானுடன் நேற்று மோதிய தாஹியா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளி வென்று அசத்திய தாஹியா, ஆசிய தொடரில் வெல்லும் 3வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே தொடரின் 65 கிலோ எடை பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய நட்சத்திரம் பஜ்ரங் பூனியா 1-3 என்ற கணக்கில் ஈரான் வீரர் ரகுமான் மூசாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்….

The post ஆசிய போட்டியில் 3வது தங்கம் ரவி தாஹியா சாதனை appeared first on Dinakaran.

Tags : Ravi Dahiya ,Asian Games ,Ulaanbaatar ,Asian Wrestling Championship ,Asian Championship ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு தாவினார் தடகள வீராங்கனை