×

15வது திமுக உட்கட்சி பொதுத்தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று விநியோகம்: அமைச்சர் நாசர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு: நடைபெற உள்ள திமுக 15வது உட்கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பெற்றுச்சென்றவர்கள் ஆவடி, திருமலைராஜபுரம், ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (23ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணியளவில் எனது தலைமையில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களான விவசாய தொழிலாளர் அணி செயலாளர் உ.மதிவாணன், தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் ஆகியோர் வேட்புமனு விண்ணப்ப படிவத்தை வழங்குகின்றனர். இதனை ரூ. 25 செலுத்தி பெற்றுக்கொண்டு சரியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் வரும் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் ஆணையர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், மா.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், காக்களூர் த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார், ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனவே இதில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்….

The post 15வது திமுக உட்கட்சி பொதுத்தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று விநியோகம்: அமைச்சர் நாசர் தகவல் appeared first on Dinakaran.

Tags : 15th Ministerial General Election Candidate ,Minister Nasser ,Thiruvallur ,Tiruvallur ,Central District ,Minister ,Minister of Disheries ,Awadi Sacha ,Nasser Awadi ,15th Kazhagam Assembly General Election ,
× RELATED திருவள்ளூரில் பெயிண்ட்...