×

கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்ட், ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ (திமுக) பேசுகையில், `கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயம் அதிகமாக கொண்ட பகுதி. இந்த பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது. அதேபோல், பூச்செடிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. ஜவ்வரிசி தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையும், சென்ட் தயாரிக்க கூடிய சென்ட் தொழிற்சாலையும் அமைத்து தரவேண்டும். ஏற்கனவே சர்க்கரை ஆலை அமைப்பதற்காக 60 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி நிலுவையில் இருக்கிறது. அந்த நிலத்தை பயன்படுத்தி அந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஏற்கனவே, அங்கு சிப்காட் பயன்பாட்டில் இருக்கிறது. அந்த பகுதியிலும் தொழிற்சாலை அமைப்பதற்கு சரியாக இருக்கும். இதனை தொழிற்துறை அமைச்சர் செய்து கொடுக்க வேண்டும்’ என்றார்.இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், `திருவள்ளூர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் குறிப்பிட்டத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும் மாவட்டமாக இருக்கிறது. பாதுகாப்பு வழித்தடத்தின் முனையாக அந்த மாவட்டம் உருவாகி கொண்டிருக்கிறது. உறுப்பினர் சொன்னதைபோல் சென்ட் தொழிற்சாலையை, மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அங்க அமைக்க தொழில் முனைவோர் முன்வந்தால் தொழில்துறை அதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளையும், வசதிகளையும் உருவாக்கி தரும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு புதிய தொழிற்பூங்காவை அமைப்பதற்கு முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி என்பது நிச்சயமாக அரசு எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்….

The post கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்ட், ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: பேரவையில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jowarisi ,Kummidipoondi ,DJ Govindarajan ,MLA ,Chennai ,DJ Govindarajan MLA ,DMK ,Legislative Assembly ,Sent ,
× RELATED ஜவ்வரிசி அல்வா