×

275 கல்லூரி விடுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.20 கோடியில் இ-நூலகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:* கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மின்நூல்கள் உட்பட இதர மின்நூல்களை இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக ஒரு நூலகத்திற்கு ரூ.80,000 செலவில் 275 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.2.20 கோடி செலவில் கணினி மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படும்.* மாணவ-மாணவியர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி விடுதிகளுக்கு பதிலாக அவற்றை மறுசீரமைத்து தேவையுள்ள 15 இடங்களில் 1 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கல்லூரி விடுதிகளாக துவக்கப்படும்.*  பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சீர்மரபினர் நல மாணவியர் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3224 இடங்களில் கல்லூரி மாணவியர் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கென ரூ.48.36 லட்சம் வழங்கப்படும்.* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிட செய்ய மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 3 கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் உண்டு உறைவிட பள்ளிகள் 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் செலவில் துவக்கப்படும்.* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் நலனுக்காக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகளாக 1 கோடியே 34 லட்சத்து 32 ஆயிரம் செலவில் நிலை உயர்த்தப்படும்.* பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்ைப சார்ந்த சலவை ெதாழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக, 10 நபர்களை இணைத்து ஒரு குழு என 25 குழுக்களுக்கு, 25 நவீன முறை சலவையகங்கள் துவங்க தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படும்.* அனைத்து விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் 3 முறை இலவச மருத்துவ பரிசோதனை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த இடைநிகழ் செலவினமாக விடுதி, கள்ளர் பள்ளி ஒன்றிற்கு 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் தொகையான ரூ.1000ஐ, ரூ.3000 ஆக உயர்த்தப்படும். இதற்கென ரூ.32.98 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறபட்டுள்ளது….

The post 275 கல்லூரி விடுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.20 கோடியில் இ-நூலகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajakannappan ,RS Rajakannapan ,Assembly ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...