×

2 சதவீத பூஸ்டர் தடுப்பூசி

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பேராசிரியர் அமிதா குப்தா கூறுகையில், ‘‘ பல்வேறு நாடுகளில்  மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைப்பதில் பிரச்னை உள்ளது. உலகம் முழுவதும் உள்ள 56 நாடுகளில் இன்னும் 10 சதவீதம் பேருக்கு கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாதவரை உலகில் உள்ள யாருக்கும் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்காது. இந்தியாவில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’’ என்றார்.* சீனாவின் ஷாங்காய் நகரில்  கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து ஷாங்காயில் வரும் 26ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.* சீனாவில் நேற்று முன்தினம்  மொத்த கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 119 ஆக இருந்தது. இதில், ஷாங்காயில் மட்டும் ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். …

The post 2 சதவீத பூஸ்டர் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Amita Gupta ,John Hopkins University ,United States ,Corona ,
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!