×

ஜோலார்பேட்டை அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்-கால்வாய் பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி ஊராட்சி ஏலகிரி மலை கூட்டு சாலையில், கால்வாய் கட்டும் பணி நிறைவு பெறாமல் கழிவுநீர் தேங்கி நோய்த்தொற்றும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் அச்சம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சி திருப்பத்தூர் – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை, ஏலகிரிமலை கூட்ரோடு பகுதியிலிருந்து ஏலகிரி மலை அடிவாரம் வரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு வழி சாலை அமைக்க சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது. இதனையடுத்து தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. ஆனால் ஏலகிரிமலை கூட்ரோடு பகுதியின் சாலையோரத்தில் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அந்தப் பணியானது முழுமை பெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கால்வாய் கட்டப்பட்டு முழுமையடையாத கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல இடையூறாக உள்ளது. மேலும் இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏலகிரி மலை கூட்டு சாலையில் கால்வாய் அமைக்கும் பணி முழுமை பெறாமல் நிலுவையில் உள்ளதை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஜோலார்பேட்டை அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று அபாயம்-கால்வாய் பணிகளை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Zolarbat ,Jolarpet ,Ponneri Naval Elagiri Mountain Joint Road ,Zolarbat- ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி