×

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புற்றுநோயுடன் போராடுகிறாரா?.. மேசையை இறுகப் பிடித்து அமர்ந்திருப்பதால் சந்தேகம்

லண்டன்: உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புற்றுநோயுடன் போராடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், அவர் அமைச்சருடன் பேசும்போது மேசையை இறுகப் பிடித்து அமர்ந்திருப்பதால் சந்தேகம் வலுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலான நிலையில், அந்நாட்டு அதிபர் புடின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணரும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் முன்னாள் ஆலோசகருமான ஆன்டெர்ஸ் அஸ்லூன்ட் கூறுகையில், ‘புடின் மற்றும் ஷோய்கு  ஆகிய இருவரும் மனச்சோர்வு மற்றும் மோசமான உடல்நிலையால் பாதிக்ப்பட்டுள்ளனர்’ என்று கூறினார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயுடன் போராடுகிறார் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை வதந்திகள் என்று மற்றொரு தரப்பு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே தனது பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குடன், அதிபர் புடின் பேசும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், நாற்காலியில் சாய்ந்தவாறு மேசையை  இறுகப் பிடித்தபடி புடின் உள்ளார். இவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் அவரது  முகம் மற்றும் கழுத்து ஆகியவ வீங்கியிருப்பது போன்று உள்ளது. மேலும், புடின் தனது வலது கையை மேசையின் விளிம்பை இறுகப் பிடித்துக் கொண்டு ஷோய்குவிடம்  பேசுகிறார். அவர் தனது காலை கீழே அழுத்தமாக வைத்துள்ளார். இதுதொடர்பாக இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘தன்னைப்பற்றிய கருத்துக்களை மக்கள் படிக்க வேண்டும் என்றும், தனக்கு நோய் பாதிப்பு இருப்பதாக வதந்திகள் பரவ வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமர்ந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளன. டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தின் உடல் மொழி  நிபுணரான பேராசிரியர் எரிக் புசி கூறுகையில், ‘கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு புடின் அமர்ந்திருந்தற்கும், தற்போது அமர்ந்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. நீட்டிய கையுடன் தன்னை முட்டுக்கொடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி  வைத்திருப்பதிலும் சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்தார். இவ்வாறாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புடினை சந்திக்கும் ஐ.நா தலைவர்உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், அடுத்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ்வில் சந்தித்து பேசுகிறார். வரும் வியாழக்கிழமை உக்ரைன் செல்லும் அன்டோனியோ குட்டெரெஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவையும் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ செல்லும் அன்டோனியோ குட்டெரெஸ், அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து போர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜெர்மனியில் கூடும் தலைவர்கள்உக்ரைன் விவகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜெர்மனியில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. உக்ரைனை மையமாகக் கொண்ட நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘ஏப். 26ம் தேதி ஜெர்மனியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நேட்டோ மற்றும் நேட்டோ அல்லாத நாடுகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது’ என்றார்….

The post உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புற்றுநோயுடன் போராடுகிறாரா?.. மேசையை இறுகப் பிடித்து அமர்ந்திருப்பதால் சந்தேகம் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Doubt ,London ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு