×

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் கவனக்குறைவாக இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியுடன் சுகாதாரத்துறை இணைந்து ஐஐடி மருத்துவக் குழுவுடன் 18 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது, இதில் 9 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இன்று ஒரு நாளில் மட்டும் மொத்தம் ஐஐடியில் 12 மாணவர்களுக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை தமிழ்நாட்டில் தளர்த்தவில்லை. எனவே, மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளில் கவனக்குறைவாக இருந்தால் அபராதம் வசூலிக்க நேரிடும். இவ்வாறு கூறினார்….

The post கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் கவனக்குறைவாக இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : People's Well- ,Being ,Chennai ,Tamil Nadu People's Welfare Department ,Raadhakrishnan ,coronavirus pandemic ,Chennai IID ,People's ,
× RELATED ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை...