×

இருவழி சாலையை நான்கு வழிசாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: அரசு கொறடா கோவி செழியன், கும்பகோணம் செல்லும் சாலை விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஒருவழிச்சாலைகளை இருவழிச்சாலைகளாக்க வேண்டும்.இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினத்திலிருந்து கும்பகோணத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற போது முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது. திருவண்ணாமலையில் 20 லட்சம் ஆன்மீக பெருமக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். உடனடியாக ஆய்வை ரத்து செய்து விட்டு திருவண்ணாமலை சென்றேன். எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பெருமக்கள் சிறப்பாக சித்ரா பவுர்ணமியை கொண்டாடினார்கள் என்று பேசினார்….

The post இருவழி சாலையை நான்கு வழிசாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb. Velu ,Chennai ,Govt. ,Korada Govi Sezhiyan ,Kumbakonam ,
× RELATED சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு