×

பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்ட சாலை மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சட்ட பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷன் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் எந்த அளவில் உள்ளது,’ என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பில் உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான சாலை. ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று தான் பாலம் கட்ட முடியும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்படும்,’ என்றார்….

The post பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்ட சாலை மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli-Sriperumbudur High Level Road ,Central Government ,Minister AV Velu ,Chennai ,Sriperumbudur Constituency ,MLA ,Selvaperunthakai ,Congress ,Legislative Assembly ,Sriperumbudur ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்