×

ஹெராயின் கடத்தல் மலேசிய தமிழருக்கு அடுத்த வாரம் தூக்கு

கோலாலம்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). மாற்றுத் திறனாளியான இவர் சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 2010ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சிங்கப்பூர் சட்டத்தின்படி போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும். தூக்கு தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். அது  தள்ளுபடி செய்யப்பட்டது.கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி இவரை தூக்கில் போட தேதி குறிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் பரவியதால், அவரை தூக்கிலிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாகேந்திரனின் இறுதி மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது….

The post ஹெராயின் கடத்தல் மலேசிய தமிழருக்கு அடுத்த வாரம் தூக்கு appeared first on Dinakaran.

Tags : Kuala Lumpur ,Nagendran Dharmalingam ,Singapore ,Malaysia ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...