×

மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய பழங்கால கல் தூண், கோயில் கலசம்: ஆய்வுக்கு எடுத்து சென்ற தொல்லியல் துறை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னர்கள் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கிருஷ்ணா மண்டபம் உள்பட பல்வேறு , கணேச ரதம்  உள்பட பல்வேறு  சிற்பங்களை அழுகுர வடிவமைத்தனர். இந்த சிற்பங்களை கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்தவேளையில், மாமல்லபுரம் மீனவர் குப்பத்தில், கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கரையோரம் அரிப்பு ஏற்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை திடீரென கடல் உள் வாங்கியது. அப்போது, பழங்கால கோயில்களின் கருங்கல் தூண்கள், கோயில் உச்சியில் இருக்கும் கலசம், பழமையான செங்கற்கள் ஆகியவை பாசி படிந்து கரை ஒதுங்கி கிடந்தது. இதையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு பழங்கால பொருட்களை கண்டு ரசித்தனர். சிலர், தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.இந்நிலையில், தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் தலைமையில் ஊழியர்கள், நேற்று மாமல்லபுரம் சென்றனர். அங்கு, கரை ஒதுங்கிய கருங்கல் தூண், கோயில் கலசம், செங்கற்களை சேகரித்து, ஆய்வுக்காக சென்னையில் உள்ள தொல்லியல் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், ஆய்வு செய்வதற்காக எடுத்து செல்கிறோம். ஆய்வின் முடிவில், கடலில் மூழ்கிய பழங்கால கோயில்களின் பாகங்களா, கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரின் பாகங்களா அல்லது வேறு என்ன என்பது தெரியவரும்’ என்றனர்.பழங்கால நாணயம்?மாமல்லபுரம் கடற்கரையில் கடல் சீற்றத்திற்கு பின் கடல் உள் வாங்கியபோது கருங்கல் தூண்கள், கோயில் கலசம் ஆகியவை கரை ஒதுங்கியது. இதை அறிந்து உள்ளூர் மீனவ பெண்கள் பழமையான செங்கற்களை தங்களது  வீட்டுக்கு கொண்டு சென்றனர்.அப்போது, மாமல்லபுரம் மீனவ  குப்பத்தை சேர்ந்த மீனவர் விஜயகுமார், கருங்கல் இடிபாடுகளுக்கு  அடியில் சிக்கிய பழங்கால நாணயத்தை கண்டெடுத்து, அதனை படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அவரிடம் இருந்து தொல்லியல் துறையினர் பெற்று, ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….

The post மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கிய பழங்கால கல் தூண், கோயில் கலசம்: ஆய்வுக்கு எடுத்து சென்ற தொல்லியல் துறை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Temple Calasam ,Archaeology Department for ,Pallava ,Kings ,Arsunan Tapasu ,Department of Archaeology ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...