×

மெல்ல மெல்ல உயரும் கொரோனா; சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு.! சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 29 மாணவர்கள் மற்றும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது….

The post மெல்ல மெல்ல உயரும் கொரோனா; சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு.! சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai IID ,Secretary of ,Health Secretary ,Radhakrishnan ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...