×

சொத்து பிரச்னையில் கொழுந்தனாரை அடித்து கொலை செய்த அண்ணி உள்பட 4 பேருக்கு ஆயுள்-சிதம்பரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிதம்பரம் : சொத்து பிரச்னையில் கொழுந்தனாரை அடித்து கொன்ற அண்ணி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வலசக்காடு வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (60). இவரது மகன்கள் கலையரசன்(40) மற்றும் பாலமுருகன் (32). கலையரசன் கடந்த சில வருடங்களாகவே வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவரது குடும்பத்தினருக்கும் பாலமுருகனுக்கும் இடையே சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி மீண்டும் இவர்கள் குடும்பத்தினரிடையே சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலையரசனின் மனைவி சாந்தி (38), அவரது உறவினர்கள் சாமிதுரை (47), ராமலிங்கம்(60) வேலுமணி (31) ஆகிய 4 பேரும் சேர்ந்து பாலமுருகனை கட்டை கழியால் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் 4 பேர் மீதும் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் நேற்று தீர்ப்பளித்தார். அதில் பாலமுருகனை அடித்துக் கொலை செய்த அவரது அண்ணி சாந்தி உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா ரூ.1000 அபராதம் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் மனோகரன் ஆஜராகி வாதாடினார்….

The post சொத்து பிரச்னையில் கொழுந்தனாரை அடித்து கொலை செய்த அண்ணி உள்பட 4 பேருக்கு ஆயுள்-சிதம்பரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Arush-Chidambaram Court of Arush-Chidambaram ,Kolandanan ,Chidambaram ,Sidambaram ,Life Sidambaram Court of Arbitration ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்