×

துரத்திய யானையிடம் தப்பிக்க ஓடிய வனத்துறை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வால்பாறை: வால்பாறை அருகே யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிய வனத்துறை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் வனப்பகுதியில், நேற்று காலை ஜிபிஎஸ் ரீடிங் எடுக்க வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் ஓட்டுநர் ரவிச்சந்திரன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது யானை விரட்டியதாக கூறப்படுகிறது. ஓடி தப்பிக்க முயன்றபோது, ரவிசந்திரன் (45) மயங்கி விழுந்துள்ளார். சக ஊழியர்கள் மீட்டு, வனத்துறை வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஒற்றை யானையிடம் தப்பிக்க முயன்று ஓடியபோது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்’’ என்றனர்….

The post துரத்திய யானையிடம் தப்பிக்க ஓடிய வனத்துறை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : WALBARA ,Valpara ,Govai ,
× RELATED பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை...