×

நூற்பு ஆலையில் சிறுமி பலாத்காரம்: வாலிபரிடம் போலீசார் விசாரணை

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகேயுள்ள நூற்பு ஆலையில் சிறுமி பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசபாளையத்தில் தனியார் நூற்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெப்படையை சேர்ந்த 14 வயது சிறுமி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு சிறுமி ஆலைக்கு வேலைக்காக சென்றார். நள்ளிரவு தனியாக வேலை செய்து கொண்டிருந்த சிறுமியை அதே ஆலையில் பணியாற்றி வரும் 30 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இன்று காலை வீடு திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடூரத்தை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வெப்படை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 14 வயதான சிறுமி நூற்பு ஆலையில் பணியாற்றியதால்,  குழந்தை தொழிலாளர் தடுப்பு விவகாரத்தில் ஆலையிலும் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post நூற்பு ஆலையில் சிறுமி பலாத்காரம்: வாலிபரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Pallipalayam ,
× RELATED மின்சார ஊழியருக்கு வலிப்பு: நாமக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு