×

தடைகாலம் எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: வாவல் கிலோ ரூ.800, காலா ரூ.600

நாகை: மீன்பிடி தடைகாலம் காரணமாக மீன்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலில் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டு மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படும். அதன்படி இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவு துவங்கியது. இதனால் நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறையை சேர்ந்த சுமார் 1லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது படகுகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்ய விசைப்படகுகள் செல்லாததால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி மீன் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் டெல்டா கடலோர மாவட்டங்களில் பல கோடி மீன் ஏற்றுமதி பாதிக்கப்படைந்துள்ளது.நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் மட்டும் 5 கடல் நாட்டிக்கல் தூரம் சென்று கடலில் மீன்பிடித்து வருகின்றன இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது இதனால் மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் 50 பைபர் படகுகளில் மீனவர்கள் அதிகாலை 4 மணிக்கு சென்ற மீனவர்கள் 10 மணிக்கு கரை திரும்பினர் மீன்களை வாங்க மணிக்கணக்கில் மீனவ தொழிலாளர் கரைகளில் காத்திருந்தனர். குறைந்தளவே மீன்கள் வந்திறங்கியதால் விலை பல மடங்கு உயர்ந்தது. கிலோ வாவல் ரூ.600லிருந்து 800, மத்தி ரூ.30லிருந்து 80, வாலை ரூ.200லிருந்து 300, பன்னா 150லிருந்து 200, காலா 400லிருந்து 600, புள்ளி நண்டு 250லிருந்து 400, நீள கால் நண்டு 500லிருந்து 700, வெள்ளை இறால் ரூ250லிருந்து 350, கருப்பு இறால் 300லிருந்து 400க்கு விற்கப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி, ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி மீன் இறங்கு தளங்களிலும் விலை அதிகமாக விற்கப்பட்டது. கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.450க்கு விற்ற ஷீலா ரூ.600, முரள் ரூ. 300 லிருந்து 500, காலா ரூ. 450 லிருந்து 650, இறால் ரூ.400லிருந்து 650, நண்டு வகை ரூ.400 லிருந்து 600 என இரு மடங்கு உயர்ந்தது. இதனால் மீன் வியாபாரிகள், அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்….

The post தடைகாலம் எதிரொலி: மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: வாவல் கிலோ ரூ.800, காலா ரூ.600 appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?