×

அம்மன் வேடத்தில் நடிக்கிறார் பிந்து மாதவி

சென்னை: அம்மன் வேடத்தில் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் நடிகை பிந்து மாதவி. ஒரு காலத்தில் தமிழ் படங்களில் அம்மன் கதை படங்கள் நிறைய வந்தன. கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன், மீனா, சவுந்தர்யா உள்ளிட்ட பல நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றார்கள். அதன் பிறகு அம்மன் வேட கதை படங்கள் வருவது நின்றுவிட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் சமூக கதை படத்தில் அம்மன் வேடம் இடம்பெற உள்ளது. நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம் படங்களை இயக்கிய சார்லஸ் இயக்கும் அடுத்த படம், நாகா. இந்த படத்தில் பிந்து மாதவியும், ரைசா வில்சனும் நடிக்கிறார்கள். மேலும் ஸ்ரீகாந்த், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி சார்லஸ் கூறியதாவது: சட்டத்தால் எதுவும் செய்ய முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த, ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம், அவதாரமெடுத்து வந்து சம்ஹாரம் செய்து அழிப்பதே படத்தின் கதை. பிந்து மாதவி தீயவர்களை அழிக்கும் மானஸா தேவியாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தொல்லியல் ஆய்வாளராக நடிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பல ஊர்களில் இருக்கும் நாகராஜா கோயில்கள் மற்றும் நாகநாத சுவாமி கோயில்களில் படமாக்கப்படுகிறது. என்றார்….

The post அம்மன் வேடத்தில் நடிக்கிறார் பிந்து மாதவி appeared first on Dinakaran.

Tags : Bindu Madhavi ,Amman ,Chennai ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்