×

காவல்துறை அதிகாரிகளை ஊழல்வாதிகள் என தெரிவித்த தனி நீதிபதியின் கருத்துகள் நீக்கம்: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை:  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், தவறான புகார் என புகாரை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து முடித்துவைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தற்போது காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர். ஊழல்வாதியாக உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.  தனி நீதிபதியின் இந்த கருத்துகளை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  டிஜிபி சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்த தனி நீதிபதி, வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து இருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல. இதுபோன்ற கருத்துகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் மன உளைச்சலை  ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க கூடாது. உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஆலோசனையில், வழக்கிற்கு அப்பாற்பட்டு தேவையில்லாமல் கருத்துகளை தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், காவல்துறை மீது தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்….

The post காவல்துறை அதிகாரிகளை ஊழல்வாதிகள் என தெரிவித்த தனி நீதிபதியின் கருத்துகள் நீக்கம்: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vasanthi ,Namakkal district ,Natesan ,Rajavelu ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...