×

ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் பணிகள்: காஞ்சி இணை ஆணையர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் பணிகளை காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி நேற்று ஆய்வு செய்தார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக காற்கரையோரம் உள்ள இடத்தை காஞ்சிபுரம் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் வான்மதி நேற்று திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம், நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் மணிமண்டபம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். இதையடுத்து, மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்து, 3 மாதத்தில் அனைத்து பணிகளும் முடித்து, கும்பாபிஷேகம் நடத்தி பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, இந்து சமய அறநிலைய துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதி, கோயில் செயல் அலுவலர்கள் திருவிடந்தை குமரன், திருப்போரூர் சக்திவேல், மாமல்லபுரம் சிவசண்முக பொன்மணி உள்பட பலர் இருந்தனர்….

The post ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் பணிகள்: காஞ்சி இணை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Srithalasayana Perumal Temple ,Kanchi ,Mamallapuram ,Kanchipuram ,Commissioner ,Vanmati ,Sri Thalasayana Perumal Temple ,Mamallapuram… ,Kanchi Joint ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...