×

இலவச பல் மருத்துவ முகாம்

திருவள்ளூர்: சென்னையை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து பள்ளி வளாகத்தில் இலவச பல் மருத்துவ முகாமை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடத்துகிறது. இந்த பல் மருத்துவ முகாமை ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.இந்த முகாமில் ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் மதன் குமார் மற்றும் மருத்தவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.இந்த முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பல் பரிசோதனை, பல் சொத்தை அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல கட்டுதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.மேலும் இன்றும் நாளையும் இந்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மேலும் பயன்பெற வேண்டுமெனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்….

The post இலவச பல் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Dental Camp ,Thiruvallur ,Jaya Matriculation High School ,Thiruninnavur ,Chennai ,Ragas ,Dental ,Uthandi ,Free Dental Camp ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி