×

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான நிலங்களை அடையாளம் காண தமிழக அரசு பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ பேச்சு

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தியாகராயநகர் தொகுதி உறுப்பினர் ஜெ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:  பிளாக் செயின் தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தின் மிக பெரிய தேவை. இத்தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க அரசு தன் துறைகளில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நில பத்திரப்பதிவு துறையில்  பிளாக் செயின் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டால் இரட்டை பதிவுகள் மற்றும்  சில முறைகேடுகள் மற்றும் பல முறைகேடுகள் தவிர்க்கப்படும். அரசு தனது  துறையில் பயன்படுத்தினால் இத்தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்  பெருகும். இவ்வாறு பேசினார்….

The post தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான நிலங்களை அடையாளம் காண தமிழக அரசு பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,J. Karunanidhi ,MLA ,Chennai ,DMK ,Thiagarayanagar Constituency ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...