×

நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் பேச்சு

சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், தியாகராய நகரில் தங்கி உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார். கடந்தாண்டு பாலியல் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். தாய், மகள் மீது பாலியல் குற்றம் புரிந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின் அதிமுகவிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது நினைவுக் கூறத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் முருகேசன், தனக்கு 2 முறை சிபாரிசு செய்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் சசிகலா என்றார். சசிகலாவுக்கும் என்றைக்கும் விசுவாசி என்றும் சசிகலாவில் பயனடைந்தவர்கள் விரைவில் அவருடைய காலில் விழுவார்கள் என்று நாஞ்சில் முருகேசன் கூறியுள்ளார். தவறு செய்தவர்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் நாஞ்சில் முருகேசன் கூறியுள்ளார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சுந்தரத்தின் தூண்டுதலின் பேரிலேயே தம் மீது பாலியல் பலாத்கார வழக்கு போடப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  …

The post நன்றி கெட்டவர்கள்; விரைவில் சசிகலா காலில் விழுவார்கள்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Murugesan ,MLA ,Nange ,Chennai ,PTI ,Nanjil Murugesan ,
× RELATED செல்போன் கேட்ட மகனை மிரட்டுவதாக எண்ணி...