×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்த பாடத்திட்டம்?: தெளிவுபடுத்த தேர்வர்கள் கோரிக்கை

பழநி: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் எந்த பாடத்திட்டத்தில் நடைபெறுமென தெளிவுபடுத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டிஎன்பிஎஸ்சி  குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 12 ஆயிரத்து 800 காலியிடங்களுக்கு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை எதிர்கொள்ள லட்சக்கணக்கான  இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால், தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி  நடக்குமா? அல்லது பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா? என்ற குழப்பம்  போட்டி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவச  பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம்  டெட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படுமென அறிவித்துள்ளது.  ஆனால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பள்ளி  பாடப்புத்தகங்களை கொண்டு தயாராவதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. தேர்வின்  வினாக்கள் 90 சதவீதம் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இடம்பெறுவதால்  புதிய பாடத்திட்டமா? அல்லது பழைய பாடத்திட்டமா? என தேர்வர்கள்  குழம்புகின்றனர். எனவே டிஎன்பிஎஸ்சியும் தேர்வர்களின் குழப்பத்தை தீர்க்க  முன்வர வேண்டும்’ என்றார். …

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எந்த பாடத்திட்டம்?: தெளிவுபடுத்த தேர்வர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : DNPSC Group ,Bharani ,DNPSC Group 2 ,DNBSC Group ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவிகாசா மெட்ரிக் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு