×

கோயில் தொடர்புடைய பணிகளுக்கு கோயில் நிர்வாகம்-உபயதாரர் இடையே ஒப்பந்த உடன்படிக்கை: ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தல்

சென்னை: கோயில் தொடர்புடைய இதர பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திற்கும் உபயதாரருக்கும் இடையே ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை: நன்கொடையாளர் மூலம் மேற்கொள்ளப்படும் கோயில் திருப்பணிக்காக கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்களுடன் உடன்படிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் திருப்பணி, துறை நிதி, கோயில் நிதி, உபயதாரர் நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் உபயதாரர் மூலம் மேற்கொள்ளப்படும் திருப்பணியின் போது கோயில் நிர்வாகத்தினர், உபயதாரருடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று தெரியவருகிறது. உபயதாரர் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் கோயில் திருப்பணி மற்றும் கோயில் தொடர்புடைய இதர பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திற்கும் உபயதாரருக்கும் இடையே ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்துவது அவசியமாகிறது. கோயில் திருப்பணி உபய பணியாக மேற்கொள்ளுவதை காரணமாக கொண்டு வெளி நபர்களிடம் நன்கொடை வசூல் செய்தல் கூடாது. உபயதாரர் எவ்வித முன்உரிமையும் கோர கூடாது. கோயில் திருப்பணி உபய பணியாக மேற்கொள்ளும்போது கோயிலின் கட்டமைப்புக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படா வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டும். கோயில் திருப்பணிகள் ஆகம விதிகளுக்குட்பட்டு செய்திட வேண்டும். திருப்பணி வல்லுநர் குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். உபயதாரர் மூலம் மேற்கொள்ளும் உபயதிருப்பணியை மண்டல இணை ஆணையர்/உதவி ஆணையர், செயற்பொறியாளர் மற்றும் ஸ்தபதி ஆகியோர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும். இத்துறையின் கோயில் புனரமைப்பு வழிகாட்டி கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்….

The post கோயில் தொடர்புடைய பணிகளுக்கு கோயில் நிர்வாகம்-உபயதாரர் இடையே ஒப்பந்த உடன்படிக்கை: ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Temple ,Kumaragurupara ,Chennai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...