×

அருப்புக்கோட்டை பகுதியிலுள்ளபுறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குற்றங்கள் செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் நகரில் மதுரை ரோடு நெசவாளர் காலனி, பாலையம்பட்டி சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், விருதுநகர் ரோடு பாவடித்தோப்பு, ராமசாமிபுரம், புறநகர் பேருந்து நிறுத்தம், எம்எஸ் கார்னர், காந்திநகர் நான்குவழிச்சாலை ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில் சிசிடிவி கேமராக்கள் மானிட்டரிங் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புறகாவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. போதுமான போலீசார் இருந்தும் இந்த காவல் நிலையங்களில் போலீசார் பணியில் அமர்த்தப்படவில்லை.  நேருநகர் புறநகர் பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசாரை நியமனம் செய்து உடனடியாக செயல்பட வைக்க வேண்டும். இந்த பேருந்து நிறுத்தத்திற்கு பகல்-இரவு பாராது பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் பேருந்துக்கு அதிக நேரம் காத்திருக்கும்போது ஒருவித அச்சத்துடன் உள்ளனர். எனவே புறகாவல் நிலையங்களில் போலீசார் நியமனம் செய்து பொதுமக்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அருப்புக்கோட்டை பகுதியிலுள்ளபுறக்காவல் நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arapukkotta ,Madurai Road Weaver Colony ,Balayambatti ,Palayambatti ,Arapukotta ,Dinakaran ,
× RELATED மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை...