×

சொந்த இலை கட்சிக்காரங்க மேலேயே மாஜி விவிஐபி கடும் கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் விவிஐபி கடும் கோபத்தில் இருக்கும் விஷயத்தை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் தேர்தலை இப்போ நடத்திக்கிட்டு இருக்காங்க. இதற்காக பக்கத்து மாவட்டத்துல இருந்து தேர்தல் அதிகாரிகளை நியமிச்சு தேர்தலை நடத்துவதாக அறிவிச்சிருக்காங்க. இதன்படியே மாங்கனி மாநகரிலும் பகுதி செயலாளர் தேர்தலும் நடந்துச்சு. இதுல ஒரு பகுதி செயலாளரை ஒழிச்சுக் கட்டியே ஆகணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு ரெண்டு மாஜிக்கள், 3 பகுதி செயலாளர்கள், மாவட்டமுன்னு ஒரு கூட்டமே வேலை செஞ்சிருக்காங்க. குறிப்பிட்ட பகுதி செயலாளர மாத்தியே ஆகணுமுன்னு வீரா வேசமாக போய் மாங்கனி மாஜி விவிஐபிகிட்ட மண்டியிட்டு கெஞ்சியிருக்காங்க. இவரால வடக்கு தொகுதியில 10ஆயிரம் ஓட்டு நமக்கு கிடைக்கலன்னு வேற சொன்னாங்களாம். மாஜியோ, இருக்கிறவங்களே இருக்கட்டும். பிறகு பாத்துக்கலாமுன்னு சொல்லி அனுப்பிட்டாராம். ஆனால் ேசலம் விவிஐபியை தேடி வந்த கூட்டமோ… நாம இவ்வளவு பேரு இருக்கோம் நம்மளை விட அந்த ஒத்த ஆளு பெரிசா போயிட்டானா… நம்ம செல்வாக்கை காட்டினா தான் சேலம் விவிஐபி இனி நம்மை பார்த்து பயப்படுவாரு… நம் சொல்லை கேட்பாரு என்ற முடிவுக்கு வந்தாங்க… அதன்படியே, சேலம் விவிஐபிக்கு எதிராக ஒன்று சேர்ந்த கூட்டம் ஏற்கனவே போட்ட ரகசிய திட்டப்படி, உட்கட்சி தேர்தல்ல பழைய பகுதி செயலாளர தோற்கடித்து… தாங்கள் விரும்பிய நபரை பகுதி செயலாளராக கொண்டு வந்துட்டாங்களாம். தோற்றுபோனவர் விவிஐபிய தேடி போக… அவரோ உனக்கு எதிரா இவ்வளவு நபர்கள் வந்து இருக்காங்கன்னா நீ என்னய்யா செஞ்ச… தேர்தல்ல நான் தலையிட முடியாது. எனவே, கட்சி வேலையை போய் பாரு… மீண்டும் சான்ஸ் கிடைக்கும் அப்போது உன்னை மாவட்ட பொறுப்பில் போடுகிறேன்னு சொன்னாராம். அதே சமயம் தான் சொல்லியும் தன்னுடைய ஆளை தோற்கடித்ததால குறிப்பிட்ட அந்த குரூப் மேலே கடும் கோபத்துல இருக்காராம்… சொந்த மாவட்டத்துலேயே மதிக்க மாட்டாங்களா… இனி என் ஆட்டத்தை காட்டுகிறேன் உறுமினாராம்… சோகத்தோடு போனவரு சந்தோஷத்தோடு திரும்பினாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கூட்டுறவு சங்க மருந்தில் கரன்சியை சேர்த்தவரை கூண்டில் ஏற்ற வேண்டும் என்று எந்த பக்கம் இருந்து குரல் வந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் 20 சதவீதம்  தள்ளுபடி விலையில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து விற்பனை  செய்யப்பட்டது. இது தற்போதும் நடைமுறையில் உள்ளது. திருவல்லிக்கேணியில்  உள்ள கூட்டுறவு பண்டக சாலை (டியுசிஎஸ்) மூலமும் சென்னையில் மருந்து கடைகள்  மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு டியுசிஎஸ் மூலம் மொத்த மருந்து கொள்முதல் நிறுவனங்களில் இருந்து  பெற்று, காஞ்சிபுரம் மொத்த விற்பனை பண்டக சாலை, சிந்தாமணி கூட்டுறவு பண்டக  சாலைகள் போன்ற நிறுவனங்களுக்கு மருந்து கொள்முதல் செய்ததில் டியுசிஎஸ்  நிறுவனத்தின் 2 உயரதிகாரிகள் முறைகேடாக சம்பாதித்தது தெரியவந்தது. இதுபற்றி  விசாரணையை, டியுசிஎஸ் உயர் அதிகாரியான செல்வமானவர் செய்தார். அதில் சுமார் ரூ.40 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக 2013ம் ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அமைச்சர் மற்றும் அதிகாரிகள்  இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கிட்டாராம். தற்போதயை ஆட்சியில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவரிடம் இருந்து பணத்தை வசூல்  செய்வதுடன், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து  டியுசிஎஸ் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான் தொழிற்சங்கத்தினரின் குரலாக ஒலிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கிக்கும் கரன்சிக்கும் அப்படி என்னதான் ராசியோ தெரியல… ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரிக்க முடியல…’’ என்று வேதனைப்பட்டார் பீட்டர் மாமா.‘‘எல்லோரையும் அப்படி சொல்லாதீங்க.. ஒரு சிலர் செய்யும் தவறுக்கு, எல்லோரையும் ஒன்றாக நினைப்பது தப்பு. சரி மேட்டருக்கு வருகிறேன். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் பள்ளி எதிரே உள்ள தெருவில் கணவனை இழந்த நிலையில் 65 வயதான மூதாட்டி ஒருவர் வாடகை வீட்டில் வசிக்கிறார். சொத்து தகராறு காரணமா இவரது வீட்டுக்குள் புகுந்த சிலர், பொருட்களை சூறையாடினர். பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுபற்றி அந்த மூதாட்டி, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், திருப்பூர் மாநகர உயரதிகாரியிடம் புகார் அளித்தார். அவர், உரிய விசாரணை நடத்தும்படி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு பரிந்துரை செய்தார். ஆனாலும், நடவடிக்கை இல்லை. எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இப்புகார் மனு தொடர்பாக விசாரணையும் இல்லை. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல… ஐந்து மாதமாகியும் எப்ஐஆர் போடவில்லை. அந்த வயதான மூதாட்டி, காவல் நிலையத்துக்கு பலமுறை நடையாய் நடந்து, நொந்து, நூலாகி விட்டார். குற்றவாளிகள் தரப்புக்கும், ஸ்டேஷனில் உள்ள காக்கி உயரதிகாரிக்கும் இடையே ‘லிங்க்’ இருப்பதால்தான் மூதாட்டியை அலைக்கழிக்கிறார் ஸ்டேஷன் உயர்காக்கி  என்ற பேச்சும் நிலவுகிறது… பாவம் மூதாட்டி கால் தேய்ந்ததுதான் மிச்சம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிமென்ட் சிட்டியில் ரெஸ்பான்ஸ் இல்லாத டீனால் புலம்பும் அதிகாரிகள்…’’ பற்றிச் சொல்லுங்க என்றார் பீட்டர் மாமா.‘‘சிமென்ட் சிட்டியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீனாக முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் முத்தானவர் இருந்து வருகிறாராம். மாவட்டத்தில் யார் ேபான் செய்தாலும் செல்போனை எடுப்பதில்லையாம். சக அதிகாரிகள் கூட அவசரத்திற்கு போன் செய்தால் கூட ரெஸ்பான்ஸ் இருக்காதாம். அந்த அளவுக்கு அதிகாரமிக்க நபராக அவர் இருந்து வருகிறாராம். மாவட்டத்தில் உள்ள எதாவது ஒரு முக்கிய தகவல்கள் கூட சக அதிகாரிகள் டீனிடம் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். முக்கிய போனை கூட எடுக்காமல் இருப்பதால் தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் உள்ளதாம். செல்போனை எடுக்காமல் இருப்பதின் உள்நோக்கம் என்ன என்பது தெரியாமல் சக அதிகாரிகள் அவர்களுக்குள் புலம்பி வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post சொந்த இலை கட்சிக்காரங்க மேலேயே மாஜி விவிஐபி கடும் கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : VVIP ,Yananda ,Salem ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...