×

எலக்ட்ரிக் கார் வாங்கிய மகேஷ்பாபு

ஐதராபாத்: ரூ.1 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் காரை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வாங்கியுள்ளார். ஆடி நிறுவனம் கொண்டு வந்திருக்கும்  எலக்ட்ரிக் காரை மகேஷ் பாபு வாங்கி இருக்கிறார். ஆடி இ-ட்ரான் என்ற எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ரக கார் ஒன்றை அவர் புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எலக்ட்ரிக் கார் ஒன்றை என் வீட்டுக்கு வரவேற்கிறேன். நமது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மற்றும் நிலைத்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் ஆடி இ-ட்ரான் எப்படி இருக்கும் என்று பயன் படுத்தவும், ஆடி காரின் அனுபவத்தை பெறவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். மகேஷ் பாபு வாங்கி உள்ள ஆடி இ-ட்ரான் வகை கார்கள் இந்தியாவில் ரூ.1.01 கோடியிலிருந்து தொடங்கி ரூ.1.19 கோடி வரை விற்பனை ஆகிறது. …

The post எலக்ட்ரிக் கார் வாங்கிய மகேஷ்பாபு appeared first on Dinakaran.

Tags : Maheshbabu ,Hyderabad ,Magesh Babu ,Audi ,Maheeshbabu ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்