×

எம்பி தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் முத்துவேடு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

காஞ்சிபுரம்: முத்துவேடு ஊராட்சியில் 2019 முதல் 2024 வரை 5 ஆண்டுகளில் கிராம ஊராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் அடுத்த முத்துவேடு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் எம்பி செல்வம் கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஓய்வூதியம், உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்து, உடனடியாக தீர்வு காண வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.முத்துவேடு ஊராட்சியின் வளர்ச்சி மட்டுமின்றி தனிநபர் வளர்ச்சி அடைய பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எம்பி செல்வம், தத்தெடுத்த பின்னர் குடிநீர், தரமான சாலைகள், விவசாய திட்டங்கள், நெல் கொள்முதல் நிலையங்கள். மகளிர் சுய உதவிக் குழுக்கள், சுகாதாரம், தனிநபர் கழிப்பறை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மருத்துவம், கல்வி, வருவாய் ஆகிய துறைகளில் தேவையை கண்டறிந்து எம்பி உதவியுடன் திட்டங்கள் சீறிய முறையில் செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் முத்து வேடு ஊராட்சி ஆரம்பப் பள்ளி, சத்துணவு மையம், ரேஷன் கடைகளில் எம்பி செல்வம், கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.தேவி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். …

The post எம்பி தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் முத்துவேடு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : DAY ,MUTHUVEDU URACHI ,Kancheepuram ,Muthuved Urrachi ,Urrachi ,Justice Day ,Muthuved Muradashi ,
× RELATED அசர வைக்கும் அரசமரத்தின் கதை!