×

திருவள்ளூர் அருகே பைக் – லாரி மோதல்; 2 பேர் பரிதாப பலி: டிரைவருக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் பத்தியால் பேட்டையை சேர்ந்தவர் சின்னராசு(30), காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஹேமலதா என்ற மனைவி உள்ளார். தற்போது ஹேமலதா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதேபோல், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ஹரிஹரன்(19), அதே கம்பெனியில் சின்னராசுடன் ஒன்றாக வேலை செய்து வந்தார். நண்பர்களான இருவரும் தினந்தோறும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை இருவரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு ஒரகடத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் சாலை மணவாளநகரில் சென்றபோது திருவள்ளூர் நோக்கி பின்னால் வேகமாக வந்த கனரக லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி சின்னராசு, ஹரிஹரன் கீழே விழுந்தனர். அப்போது அந்த லாரியின் பின்பக்க டயர் அவர்கள் மீது ஏறி இறங்கியது.இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தை கண்ட கனரக லாரி டிரைவர் அங்கேயே லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த சின்னராசு, ஹரிஹரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கனரக லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகிறார். இறந்த சின்னராசு, ஹரிஹரன் ஆகியோரது உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் வேதனையாக இருந்தது. …

The post திருவள்ளூர் அருகே பைக் – லாரி மோதல்; 2 பேர் பரிதாப பலி: டிரைவருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Pathi ,Chinnarasu ,Kanchipuram District ,Orecad ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...