×

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: 4 வயது சிறுவனுடன் அகதியாக தமிழகம் வந்த பெண்

தனுஷ்கோடி: இலங்கை தமிழர்கள் 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், ஒரு சிறுமி, 4 வயது சிறுவன் அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. டீசல் மற்றும் பெட்ரோல் விலை விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. அதற்கு மாறாக உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி கடல் வழியாக படகு மூலமாக தமிழகத்தை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை தனுஷ்கோடிக்கு மட்டகளப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மன்னார் பகுதிக்கு வந்து அங்கிருந்து படகு மூலமாக அதிகாலை தனுஷ்கோடியில் உள்ள பட்டிப்பாறைக்கு வந்தவுடன் அப்பகுதி மீனவர்கள் அவர்களை மெரைன் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை நிறைவடைந்த பின் அவர்களை மண்டபம் அல்லது மறுவாழ்வு முகாம்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. …

The post இலங்கையில் பொருளாதார நெருக்கடி: 4 வயது சிறுவனுடன் அகதியாக தமிழகம் வந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Tamil Nadu ,DANUSHKODI ,Dandushkodi ,Matticaloa district ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...