×

ஆரணியில் கடந்த 3 நாட்களாக வீடுகளுக்கு அசுத்தமான குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி

ஆரணி: ஆரணியில் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குழாய்களில் அசுத்தமான குடிநீர் விநியோகிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு கமண்டல நாகநதி, தச்சூர் ெசய்யாறு படுகை மற்றும் ஆற்காடு பாலாறு ஆகியவற்றில் இருந்து தினசரி 40 லட்சம் லிட்டர் குடிநீரை பைப்லைன்கள் மூலம் நகராட்சி வளாகத்தில் உள்ள மேநீர் தேக்க தொட்டியில் சேகரித்து தினமும் அனைத்து வார்டுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக 22வது வார்டில் உள்ள பரசுராமன் தெரு, செயிண்ட் மேரீஸ் தெரு ஆகிய தெருக்களில் உள்ள வீடுகளில் எண்ணெய் பிசுபிசுப்புடன் துர்நாற்றம் கலந்த  குடிநீர் வருகிறதாம். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நேற்றுமுன்தினம் முதன்முறையாக இதுபோன்ற குடிநீர் வந்தது. ஆனால் நாங்கள் பார்த்துவிட்டு தண்ணீரை சேகரிக்காமல் விட்டுவிட்டோம். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும், 3வது நாளாக இன்றும் இதேபோன்று துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வருகிறது.இதுகுறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தெரிவித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கிறோம். குடிநீர் இல்லாமல் தவிக்கிறோம். துர்நாற்றம் கலந்த தண்ணீரை கழிப்பறைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்தனர்….

The post ஆரணியில் கடந்த 3 நாட்களாக வீடுகளுக்கு அசுத்தமான குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arani ,Aruni ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு