×

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் வன்முறை நடிகை காயத்ரி ரகுராம், பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபியிடம் விசிக புகார்

சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14ம் தேதி கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அந்த பகுதியில் கட்சி நிர்வாகிகள் இரும்பு பைப்புகளில் விசிக கொடிகளை கட்டி இருந்தனர்.இந்நிலையில், பாஜவினர் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அந்த பகுதியில் ஏராளமான காலியிடங்கள் இருந்தும், எங்கள் கொடி கம்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில் மிகவும் நெருக்கமாக அவர்களது கட்சி கொடி கம்பங்களை நட்டனர். அப்போது எங்கள் கட்சி தலைவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தார்.திடீரென 200க்கும் மேற்பட்ட பாஜவினர் இடையூறு, கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்மிட்டு வடமொழியில் தொடர்ந்து சத்தமாக கோஷங்களை எழுப்பினர். அப்போது எங்கள் கட்சி நிர்வாகிகள், கொஞ்சம் அமைதி காக்க கேட்டுக் கொண்டனர். அந்த கூட்டத்தில் நின்ற நடிகை காயத்ரி ரகுராம், நம்ம தலைவர், மினிஸ்டர் சொன்னது போல் எல்லா சிறுத்தை கொடிகளையும் பிடுங்கி எறியுங்கள் என்றார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டு தயாராக கொண்டு வந்த செங்கற்கள், இரும்பு கம்பிகளால் எங்கள் கட்சியினரை அடித்து ஆபாசமாக பேசினர். இதில் எங்கள் கட்சியை சேர்ந்த ரவி, மனோகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. ஆகவே தமிழகத்தில் பாஜவினரின் இத்தகைய வன்முறை கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், கோயம்பேட்டில் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்ட நடிகை காயத்ரி ரகுராம், கபிலன் மற்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் வன்முறை நடிகை காயத்ரி ரகுராம், பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபியிடம் விசிக புகார் appeared first on Dinakaran.

Tags : Kayatri Raguram ,Bhajaviner ,Ambetkar ,DGB ,Chennai ,Rajinikanth ,Deputy General Secretary ,Liberation Leopards Party ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்