×

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

ஆவடி: திருமுல்லைவாயல் சிவன் கோயில் அருகே வசிப்பவர் பாலசுப்ரமணியன்(72), சிவன் கோயிலில் வாகனம் நிறுத்துவதற்கான டோக்கன் வழங்கும் பணி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்ப்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 6.5 சவரன் நகை, ₹10 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருமுல்லைவாயல் போலீசில் அவர் புகாரளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தீவிரமாக தேடுகின்றனர்.ஆவடி மத்திய ரிசர்வ் படை பயிற்சி போலீசார் சண்டை: ஆவடியில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி போலீசார் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.  மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி பள்ளி ஆவடியில் உள்ளது. இதில் விருதுநகரை சேர்ந்த மணிகண்டன்(24), ஆஷிஷ்(24) ஆகிய இருவரும் கடந்த வருடம் 10ம் தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மணிகண்டன், ஆஷிஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆஷீஷ் ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரிசர்வ் படை பயிற்சி பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த  மோதல் விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பெண்ணிடம் அத்துமீறல் பைக் வாலிபர் கைது: திருவள்ளூர், ஏப்.19: பேரம்பாக்கத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் சுங்குவாச்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சகோதரியுடன் பேரம்பாக்கம் பஜார் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, பேரம்பாக்கம் மேலாண்ட தெருவை சேர்ந்த ஓம் (எ) ஆனந்தராமன்(27), மோட்டார் சைக்கிளில் அவர்கள் மீது மோதுவதுபோல் வந்தார். இதைக்கண்ட அந்த பெண் அவரை தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் இரண்டு பேரரையும் தகாத வார்த்தையால் பேசி இளம்பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். மேலும், இதை தடுக்க வந்த அவரது சகோதரியையும் தாக்கிவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து மப்பேடு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராமனை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.    மாயமான சிறுமிகள் 5 மணி நேரத்தில் மீட்பு: பொன்னேரி, ஏப்.19: மீஞ்சூர் அருகே காணாமல்போன 2 பெண் குழந்தைகள் 5 மணி நேரத்தில்  மீட்டு பேற்றோரிடம் ஒப்படைத்த  மீஞ்சூர் போலீசாரை ஆவடி கமிஷனர் பாராட்டினார். மீஞ்சூர் அடுத்த நாலூர் பத்மாவதி நகரை சேர்ந்தவர் உமாமகேஷ். இவரது மகள் தர்ஷினி(13). அதே பகுதியை சேர்ந்த ஜூலி தினகரன் என்பவரது மகள் நகசீதா(13). இருவரும் தோழிகள். சிறுமிகள் நேற்று முன்தினம் மாலை மீஞ்சூர் பஜாருக்கு சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி ஆவடி கமிஷனர் சந்தீப் ரத்தோர், துணை ஆணையர் மகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் முருகேசன் மேற்பார்வையில செங்குன்றம் சரகம் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், எஸ்ஐ வேலுமணி, காவலர்கள் மணிவண்ணன், தமிழரசன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் தனது தோழி வீட்டில் இருவரும் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் புகார் கொடுத்த 5 மணி நேரத்தில் 2 பெண் குழந்தைகளை கண்டுபிடித்த மீஞ்சூர் போலீசாரை ஆவடி கமிஷனர் சந்திப் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்….

The post வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Balasubramyan ,Thirumullaivayal Shiva Temple ,Shiva Temple ,
× RELATED அரசு கலைக்கல்லூரி சாலையில் வாகனங்கள்...