×

புஜாரா இரட்டைச் சதம்

நடப்பு ஐபிஎல் சீசனில்  சீனியர் வீரர் புஜாராவை எந்த அணியும் ஏலத்தில்  எடுக்காத நிலையில், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி தொடரில் சசெக்ஸ் அணிக்காக  அறிமுகமாகியுள்ளார். டெர்பிஷயருக்கு எதிரான ஆட்டத்தின் 2வது இன்னிங்சில்  அவர் ஆட்டமிழக்காமல் 201 ரன் விளாசினார் (383 பந்து,  23 பவுண்டரி). 2வது இன்னிங்சில் சசெக்ஸ் கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் (243 ரன்)  உடன் சேர்ந்து  3வது விக்கெட்டுக்கு 351 ரன் சேர்த்தார். அந்த அணியில் 1921க்கு பிறகு தற்போது தான் ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் இரட்டைச் சதம் விளாசியுள்ளனர். இப்போட்டி டிராவில் முடிந்தது. புஜாரா  முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 14 இரட்டைச் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post புஜாரா இரட்டைச் சதம் appeared first on Dinakaran.

Tags : Pujara ,IPL ,England ,Twin ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி