×

தொழிலாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்தும் ஃபாக்ஸ்கான் : ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை தயாரிக்க நடவடிக்கை தீவிரம்!!

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் விரிவாக்க பணிகளை செய்து வருகிறது. இந்த வளாகத்தில் செல்போன்களை உற்பத்தி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஏக்கர் நிலத்திற்கு தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரிவாக்க பணிகளை முழுவீச்சில் தொடங்க  ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலாளர்கள் தங்கி இருந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். பிறகு தமிழ்நாடு அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்  ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களின் சூழ்நிலைகளை மேம்படுத்தி தரம் உயர்த்திட வேண்டும் என்றும் தங்கும் விடுதிகளின் தரத்தை உயர்த்தி தர வேண்டும், தேவையான இட வசதி, குளியல் அறை, கழிவறை, குடி தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. 10,000 ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், ஐபோன்கள் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  …

The post தொழிலாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்தும் ஃபாக்ஸ்கான் : ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன்களை தயாரிக்க நடவடிக்கை தீவிரம்!! appeared first on Dinakaran.

Tags : Foxconn ,Apple ,Chennai ,Sriperudur ,Sriperuthur ,Dinakaran ,
× RELATED பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டம்!