×

உப்பூர் கிராமத்தில் காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்: கலெக்டர், அதிகாரிகளுக்கு மனு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சாம்பான் குளத்தை கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர், அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டர், எஸ்பி, டிஆர்ஓ, ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/5ல் 84 ஏர்ஸ் (2 ஏக்கர்) கொண்ட சாம்பான்குளம் இப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கும் மிகவும் பயன்பட்டு வந்த நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தனியாரால் தூர்க்கப்பட்டு குளம் இருந்ததற்கான அடையாளம் தெரியாதளவில் உள்ளது. எனவே பொதுமக்களின் தேவைக்காகவும், காணாமல்போன குளத்தை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து உப்பூர் ராஜேந்திரன் கூறுகையில், இப்பகுதியில் இருந்த சாம்பான்குளம் 30 வருடங்களுக்கு முன்பு தனியாரால் ஆக்கிரமிப்பு செய்து இன்று வயல்வெளியாக உள்ளது. தற்போது வருவாய்த்துறை வரை படத்தில் இந்த குளம் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்….

The post உப்பூர் கிராமத்தில் காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து மீட்டு தரவேண்டும்: கலெக்டர், அதிகாரிகளுக்கு மனு appeared first on Dinakaran.

Tags : Uppur village ,Muthuppet ,Muthupet ,Sampan pond ,
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...