×

காஷ்மீரில் நள்ளிரவில் விபத்து; சிஆர்பிஎப் வீரர் மரணம்: சிஆர்பிஎப் போலீசார் விசாரணை

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிபாரதி (38). காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று அதிகாலை 11 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ராணுவ லாரியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி, துணை ராணுவ படையினர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் 11 வீரர்களும் படுகாயமடைந்தனர். அனைவரையும் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்த மணிபாரதி சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். அவருக்கு பாரதி (35) என்ற மனைவியும், பரணி (11) என்ற மகனும், தர்ஷினி (9) என்ற மகளும் அத்திமாஞ்சேரிபேட்டையில் வசித்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து சிஆர்பிஎப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்….

The post காஷ்மீரில் நள்ளிரவில் விபத்து; சிஆர்பிஎப் வீரர் மரணம்: சிஆர்பிஎப் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,CRPF ,Natarajan ,Manibarati ,Adimancheripet ,Thiruvallur ,CRBF ,Dinakaran ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்