×

சரளா நகரில் அமைக்கப்பட்டுள்ள 33 சிசிடிவி கேமராக்கள்: டிஎஸ்பி சுனில் இயக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சரளா நகரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் குடியிருப்பு நல சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 33 அதிநவீன சிசிடிவி கேமராக்களை முக்கிய தெரு வீதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் துவக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சுனில் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டினை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post சரளா நகரில் அமைக்கப்பட்டுள்ள 33 சிசிடிவி கேமராக்கள்: டிஎஸ்பி சுனில் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Sarala Nagar ,DSP Sunil ,Sriperumbudur ,Dinakaran ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்