×

சென்னையை வீழ்த்தியது குஜராத்

புனே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ்  3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே தொடக்க வீரர்களாக ருதுராஜ், உத்தப்பா களமிறங்கினர். உத்தப்பா 3 ரன், மொயீன் அலி 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சென்னை 32 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ருதுராஜ் – ராயுடு பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்தனர். ருதுராஜ் 37 பந்தில் அரை சதம் அடித்தார். ராயுடு 46 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ருதுராஜ் 73 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். துபே 19 ரன் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. ஜடேஜா 22 ரன்னுடன் (12 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 19. 5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170  ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 94 ரன் (51 பந்து, 8 பவுண்டரி, 6  சிக்சர்) (அவுட் இல்லை) எடுத்தார். ரஷித்கான் 40  ரன் எடுத்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் பிராவோ 3 விக்கெட், மகீஷ் 2  விக்கெட் வீழ்த்தினர்….

The post சென்னையை வீழ்த்தியது குஜராத் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Chennai ,Pune ,Gujarat Titans ,IPL league ,Chennai Super Kings ,MCA ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...