×

WHO தலைவர் டெட்ராஸ் முன்னிலையில் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!

ஜெய்ப்பூர் : ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.   ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.  ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.   பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம்ஏப்ரல் 19 அன்று பிற்பகல் 3.30 மணியளவில், மொரீஷியஸ் பிரதமர் திரு.பிரவீன் குமார் ஜெகநாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ராஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் முன்னிலையில், ஜாம் நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.   பாரம்பரிய மருந்துகளுக்கான இந்த சர்வதேச மையம், பாரம்பரிய மருந்துகளுக்காக  அமைக்கப்படும் உலகின் முதலாவது மற்றும் ஒரே சர்வதேச மையம் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த மையம்,  உலக ஆரோக்கியத்திற்கான சர்வதேச மையமாக உருவெடுக்கும்.  …

The post WHO தலைவர் டெட்ராஸ் முன்னிலையில் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Gujarat ,WHO ,Tedros ,Jaipur ,World Health Organization ,International Center for Traditional Medicine ,Jam Nagar ,Gandhinagar ,Center for Traditional Medicine ,President ,Tedras ,
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...