×

எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்கும் திட்டம்: அனுமதியை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்கும் கட்டுமானத்திற்காக வழங்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியை  தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. சிஇஐஏஏ எனப்படும் தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் பொதுப்பணித்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில் இருந்து மாதவரத்தில் உள்ள எர்ணாவூர்குப்பம் வரை 19 கடல் அரிப்பு தடுப்பு கட்டுமானம் அமைப்புகளை ரூ.39 கோடி மதிப்பீட்டில் கட்டி வந்தது. இந்த கட்டுமானங்கள் கடலோர சுற்றுசூழலை பாதிப்பதால் அதனை தடுத்து நிறுத்த உத்தரவிடக்கோரி பாலமோகன் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.கடற்கரை ஓரத்தில் இதுபோன்ற கடினமான கட்டமைப்புகளை நிர்மானிப்பதால் ஏற்படும் சுற்றுசூழல் அழிவு, இயற்கை செயல்முறைகள், சுற்றுசூழல் மற்றும் மீனவ சமூகத்தை பாதிக்கும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆதாரமாக புதுச்சேரியில் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்களால் மற்ற இடங்களில் உருவான கடல் அரிப்பை குறித்த ஆதாரங்களை அவர் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்னை எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்கும் கட்டுமானத்திற்காக வழங்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வடசென்னையில் எர்ணாவூர்குப்பம் வரை 19 இடங்களில் நீர்வளத்துறை முன்மொழிந்துள்ள கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டத்தை தற்காலிக தீர்வாகவே கருதுவதாக தீர்பாயம் தெரிவித்துள்ளது.   …

The post எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்கும் திட்டம்: அனுமதியை ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Green Tribunal ,CHENNAI ,Ennoor, Chennai ,
× RELATED எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்